12-ஆ வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் தொழிலாளியான கல்பனா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்த மகளை கல்பனா திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய கல்பனா தனது மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.