குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவரின் மனைவியைபாலியல் தொழிலாளியாக்குவோம் என்று காவல்துறை மிரட்டிய சம்பவம், பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கடந்த டிசம் பர் 20-ஆம் தேதி லக்னோவில் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ராபின் வர்மாவும் ஒருவராவார். உத்தரப்பிரதேச பாஜக காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்துள்ள ராபின் குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அதில், குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்காக, உத்தரப்பிரதேச பாஜக அரசின் காவல் துறை தன்னை மோசமான வகையில் சித்ரவதைக்கு உள் ளாக்கியதாக கூறியுள்ளார். “போலீசார் என்னை உடல்ரீதியாக- மனரீதியாக சித்திரவதை செய்து அவமதித்தனர். எனது மனைவி மற்றும் குழந்தைகளை இழிவுபடுத்திப் பேசினார்.
குறிப்பாக எனது மனைவியையும் 2 வயதே ஆகும் பெண் குழந்தையையும் பாலியல் தொழிலாளியாக்குவோம் என்று மிரட்டினார்கள்” என்று தெரிவித்துள்ளார்.“அதுமட்டுமல்ல, குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரானபோராட்டத்தில் கலந்துகொண்டால், குடும்பத்தையே அழித்து விடுவோம் என்றும்அச்சுறுத்திய போலீசார், இந்துவாக இருக்கும் நீ, முஸ்லிம் களை ஏன், நண்பர்களாக கொண்டிருக்கிறாய் என்று கேட்டு சித்திரவதை செய்தார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.