சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக சிறந்த கேப்டனாக விளங்கிய எம்.எஸ்.டோனி திடீரென பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய கேப்டனாக ஜடேஜாவை சி.எஸ்.கே அணி நியமித்தது. இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது,
எம். எஸ்.டோனியின் முடிவை நாங்கள் எப்போதும் மதித்து வருகிறோம். அவர் எங்களுக்கு ஒரு தூணாக இருக்கிறார். தொடர்ந்து அப்படியே இருப்பார். கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைக்க இது சரியான நேரம் என அவர் உணர்ந்ததால் அதை செய்துள்ளார். இந்த முடிவை எடுத்தது அவர்தான். டோனியின் முடிவு எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. இதுதொடர்பாக நாங்கள் க்டந்த ஆண்டே விவாதித்துள்ளோம். ஜடேஜாவை அவர் இந்த தொடரில் வழிநடத்துவார். அணிக்கும் ஒரு சீனியர் வீரராக இருந்து வழிநடத்துவார். ஐ.பி.எல்.லில் டோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. தொடர்ந்து அவர் விளையாடுவார் என நம்புகிறேன் என தெரிவித்தார்.