Categories
மாநில செய்திகள்

“இனி ஆப்புதான்” போலி பத்திரங்கள் தயாரிப்பவர்களுக்கு…. பதிவுத்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

போலி ஆவணங்கள்  தயார் செய்து மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உரிமையாளர்களுக்கு தெரியாமல்  நிலத்தை அபகரிப்பது அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்தால், சார் பதிவாளர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். இதனையடுத்து போலி ஆவணங்கள் தயாரித்தது உறுதி செய்யப்படுகிறது. இருப்பினும் மாவட்ட பதிவாளர்கள் மோசடி செய்த நபர்களுக்கு துணை போகின்றனர் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இதை தடுக்கும் வகையில் பத்திர பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் ஒரு பத்திரம் போலியானது என்று தெரிந்தால் அதன் உண்மை நிலவரம் மற்றும் தகவல்களை பத்திரத்தில் மாவட்ட பதிவாளர்கள் சேர்க்க வேண்டும். இதனையடுத்து போலி பத்திரம் என்று தெரிந்தால் அதில் எந்த ஒரு பதிவையும் ஏற்படுத்தக் கூடாது. இதை மீறும் பத்திர எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மோசடி செயல்களில் ஈடுபடும் ஆவண எழுத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜிக்கும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சில்க்கும் கடிதம் அனுப்பப்படும். இதேப்போன்று 19 ஆணைகளை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்த ஆணைகளை மாவட்ட பதிவாளர் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |