மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலுள்ள பிரபலமான பள்ளியில் மன்கேஷ் என்பவர் காவலாளியாக இருக்கிறார். இவர் நேற்று முன்தினம் பள்ளியில் படிக்கும் 11 வயது மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்து கழிவறைக்கு கடத்தி சென்றுள்ளார். இந்த நிலையில் மன்கேஷ் அங்கு வைத்து மாணவியிடம் தவறாக நடந்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்புணர்வு, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவலாளியை கைது செய்தனர்.