மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மனித கடத்தல், குடும்ப வன்முறை, பாலியல் சுரண்டல் குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா, போக்சோ நீதிபதி பாபுலால், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பரமேஸ்வரி, சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயா, பாதுகாப்பு அலுவலர் சுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் பெண்கள் பண்டமாற்று பொருட்களை போல நடத்தப்படுகிறார்கள். மேலும் பெண்கள் வரும் பிரச்சனைகளை மன தைரியத்துடன் சமாளிக்க கற்று கொள்ள வேண்டும் எனவும், பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது முக்கிய நோக்கமாக உள்ளது என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.