Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…! மொத்தம் 3 1/2 கோடி ரூபாய் வருவாய்…. எந்த கோவில் தெரியுமா…?

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவிலில் 3 1/2 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த வாரம் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழாவிற்கு பிறகு பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 58 லட்சத்து 87 ஆயிரத்து 920 ரூபாய் கிடைத்துள்ளது. இதனையடுத்து 1341 கிராம் தங்கம், 13 1/4 கிலோ வெள்ளி, 179 வெளிநாட்டு கரன்சி ஆகியவை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |