தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மட்டப்பாறை கிருஷ்ணாபுரம் அருகில் தனியார் கயிறு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கயிறு மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.