Categories
உலக செய்திகள்

துபையில் உலக கண்காட்சி…. “தமிழ்நாடு அரங்கை” திறந்து வைத்து MK-Stalin பெருமிதம்….!!!

துபாயில் நடைபெறும் சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

துபாயில் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா உட்பட 192 நாடுகள் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் தனித்தனியாக ஒவ்வொரு நாடுகளுக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சர்வதேச அளவில் தமிழ்நாடு அரங்கு மூலம் தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரங்கை தொடங்கி வைப்பதற்காக துபாய் சென்றுள்ளார்.

அவரை துபாய் அரசு அதிகாரிகள் மற்றும் இந்தியத் துணைத்தூதர் டாக்டர் அமர் புரி வரவேற்றனர். இந்நிலையில் நேற்று காலை 11:30 மணி அளவில் மு க ஸ்டாலினுடன், லுலு குழுமத்தின் தலைவரும், அபுதாபி வர்த்தக போர்வையின் தலைவருமான எம் ஏ யூசப் அலி, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் இந்திய துணை தூதர் டாக்டர் அமன் புரி ஆகியோர் சென்றனர்.

இதனைத்தொடர்ந்து  சர்வதேச நிதி மையத்திற்கு சென்ற ஸ்டாலினை அமீரக வெளிநாட்டு வர்த்தகத் துறையின் துறை மந்திரி டாக்டர் தானி பின் அகமது ஜையூதி மற்றும் பொருளாதார மந்திரி அப்துல்லா பின் தவுக் அல் மர்ரி இருவரும் இணைந்து வரவேற்றனர். இதற்கிடையில் அமீரக மந்திரிகளுடன் பல்வேறு துறைகளின் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்.

இதனைத் தொடர்ந்து மாலையில் மு க ஸ்டாலின் துபாய் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார். இதன்பிறகு மு க ஸ்டாலின் கூறுகையில். “உலகத் தரத்திலான இந்த கண்காட்சியை நடத்தி வரும் துபாய் அரசுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்நாட்டின் தரப்புக்கும், பிறப்புக்கும் இந்த நிகழ்ச்சியின் வெற்றியே சான்று. இதனைத் தொடர்ந்து இந்த கண்காட்சியில் இந்திய அரங்கில் தமிழ்நாடு வர்த்தகத்தை தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். முக்கியமாக வளர்ந்து வரும் துறைகளில் எங்கள் மாநிலத்தின் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்களும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் தமிழ் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின்  சுற்றுலா, மருத்துவம்  சுகாதார பாதுகாப்பு, கலை, கலாச்சாரம் மற்றும் தொழில் பூங்கா போன்ற முக்கிய துறைகளின் பற்றிய தகவல்கள் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும். இந்த அரங்கத்தை பார்ப்பவர்கள் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த வளர்ச்சியை நன்கு புரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நான் தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக துபாய்க்கு வருவதில் அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன். உலகத்தில் தமிழக மக்கள் எந்த பகுதியிலோ, நாடுகளிலோ இருந்தாலும் அவர்களுக்கான தமிழக அரசு குரல் கொடுத்துக் கொண்டு, பாதுகாப்பாய் இருக்கிறதோ தொடர்ந்து நடைபெறும். இந்நிலையில் இந்த கண்காட்சி ஒற்றுமை இணைந்து வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டிய நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் நம்முடைய தமிழ் கலாச்சாரத்தை பண்பாட்டை உணர்த்தக்கூடிய வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கும் கலைஞர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |