ரயில் என்ஜினில் பெண்ணின் கால் சிக்கியிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் ரயில்வே நிலையத்திற்கு மும்பையில் இருந்து ரயில் வந்தது. அதன்பிறகு ரயில் என்ஜினை கழட்டும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது என்ஜினில் ஒரு இளம் பெண்ணின் கால் சிக்கியிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரயில் என்ஜினில் சிக்கியிருந்த பெண்ணின் காலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் என்ஜினில் சிக்கிய பெண்ணின் கால் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.