Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்…. “73 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து”….!!!

பிரமாண்டமாக அரங்கேறி வரும் 12வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது  நியூசிலாந்தில் நடை பெற்று வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றதில் அரை இறுதி போட்டிக்கு தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான போட்டியில் இந்தியா, வெஸ்ட் இன்டீஸ், இங்கிலாந்து ஆகிய  அணிகள் உள்ளன. நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இன்று நடந்த 26-வது ‘லீக்’ ஆட்டத்தில் மோதிக்கொண்டன.
முதல் ஆட்டக்காரர்களாக நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட நிலையில்
50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன் குவித்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி 266 ரன்கள்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கியது. ஆனால் எதிர்பாரதவித்தாமாக 50 ஓவரில் 9 விக்கெட்  இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தது. இந்நிலையில் 71 ரன்கள்  வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று நியூசிலாந்து அணி வெற்றியை பெற்றது.

Categories

Tech |