கேரளாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிரபல வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, “ஐந்தாம் தலைமுறை அரசியல்வாதியான ராகுல் காந்தியை மக்கள் விரும்பவில்லை.
ராகுல் திறமைமிக்கவர்தான் என்றாலும் ஐந்தாம் தலைமுறை அரசியல்வாதியான அவரை மக்கள் விரும்பவில்லை. பிரதமர் நரேந்திர மோடி சுயமாக உருவான தலைவர். கடின உழைப்பால் இந்த நிலைக்கு வந்துள்ளார். ராகுல் காந்தி அரசியலில் தொடர்வது மோடிக்கு சாதகமாக அமையும்” எனவும் கூறினார்.
ராமச்சந்திர குஹாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார். எனினும் கேரளாவின் வயநாட்டில் வெற்றிபெற்றார்.