ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் பிரசித்தி பெற்ற அபிஷ்ட வரதராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பிரதிஷ்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று பிரதிஷ்டை திருவிழா நடைபெற்றது.
இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து விரதம் இருந்து வந்த பக்தர்கள் ராமர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக பெருமாள் கோவிலை வந்தடைந்தனர். இந்நிலையில் 16 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.