Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

35 லட்ச ரூபாய் மோசடி…. நிதி நிறுவன உரிமையாளர் கைது…. போலீஸ் அதிரடி…!!

35 லட்ச ரூபாயை மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியாடி அருகே கைலாசநாதபுரம் பகுதியில் சாம்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெகதா கிரிஸ்டி. இவர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியாகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும் இருக்கிறார். இவர்களுடைய உறவினரான சுஜான்சிங் என்பவரின் மூலம் மார்ட்டின் என்பவருடைய அறிமுகம் சாம்ராஜ்க்கு கிடைத்தது. இந்நிலையில் மார்ட்டின்,  சாம்ராஜிடம் கோவையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் தான் வேலை பார்த்து வருவதாகவும், எங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அந்த பணம் இரட்டிப்பாக கிடைக்கும் எனவும் கூறினார்.

இந்த நம்பிய சாம்ராஜ் நிதிநிறுவன உரிமையாளர் ரமேஷ் என்பவரிடம் 5 லட்சம் முன்பணம் கட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து பல மாதங்களாக தவணை முறையில் ரூபாய் 35 லட்சம் வரை பணம் காட்டியுள்ளார். இதனையடுத்து சாம்ராஜ் தன்னுடைய பணத்தை தருமாறு நிதி நிறுவனத்திடம் கேட்டுள்ளார். ஆனால் நிதி நிறுவன ஊழியர்களிடமிருந்து எந்த ஒரு சரியான தகவலும் வரவில்லை. இதுகுறித்து சாம்ராஜ் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி மோசடி குறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி நிதி நிறுவன உரிமையாளர் ரமேஷ், மார்டின் மற்றும் லட்சுமி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |