வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 2 பேரை கைது செய்த நிலையில் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை பகுதியில் மரியம்பீவி(65) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அபுல்ஹசன் என்பவர் மரியம்பீவியின் நிலத்தை போலி ஆவணம் தயாரித்தத் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த மரியம்பீவி மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி அபுல்ஹசன் தயரிந்த போலியாக தயாரித்த பத்திரத்தை ரத்து செய்துள்ளனர்.
இதனை கேட்டு ஆத்திரமடைந்த அபுல்ஹசன் அவரது ஆதரவாளர்களுடன் சென்று மரியம்பீவியை தாக்கி வீட்டு பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அவர் கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து நாகூர்கனி(35), பரக்கத்(35) ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான அபுல்ஹசனை தேடி வருகின்றனர்.