முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பச்சகொட்டாய் பகுதியில் சின்னப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சின்னப்பா உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சின்னப்பா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிவிட்டார்.
இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த முதியவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.