வீட்டிற்குள் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் ஜன்னல் வழியில் திடீரென ஏதோ விழுவது போல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது பாம்பு ஒன்று வீட்டிற்குள் ஓடியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன் குடும்பத்துடன் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் வீட்டிற்குள் பதுங்கியிருந்த பாம்பை பிடித்தனர். அந்த பாம்பு கொடிய விஷம் உடையது என்று வனத்துறையினர் கூறினார். அதன்பிறகு பாம்பு காட்டுப்பகுதிக்குள் விடப்பட்டது.