IPL 2022 15 ஆவது சீசன் இன்று தொடங்க உள்ள நிலையில் இன்று நடக்க இருக்கும் முதல் ஆட்டத்தில் CSK vs KKR அணிகள் மும்பையில் மோத உள்ளன. இந்த நிலையில் கொல்கத்தா அணி தனது பழைய கேப்டன் இயோன் மோர்கனை ஏலத்தில் கழட்டி விட்டுவிட்டு புது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுத்து புது கேப்டன் ஆக நியமித்துள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர் வருகை அந்த அணிக்கு பலம் சேர்க்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்றாலும் மோர்கனின் இழப்பு சற்று பின்னடைவு என்று தான் என்று கூறவேண்டும். மற்ற படி பேட்டிங் வரிசையில்அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(சி), நிதிஷ் ராணா போன்ற இந்திய வீரர்களும் ஆரோன் பிஞ்ச், சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல் வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர்.
பவுலிங் பொறுத்த வரைசுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்ரவர்த்தி, கருணாரத்னி, சிவன் மாவி உமேஷ் யாதவ், டிம் சவுதி போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இதை சரியான முறையில் பயன் படுத்தினால் கொல்கத்தாவின் வெற்றி நிச்சயம் என்பதில் சந்தேகம் இல்லை என கிரிக்கெட் ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.