Categories
Uncategorized

“என் வாழ்க்கையையே மாற்றிய படம் அதுதான்”… தனுஷ் ஓபன் டாக்…!!!

“காதல் கொண்டேன்” திரைப்படத்தை பற்றி தனுஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ் “துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல விமர்சனங்களுக்கு உள்ளானர். இருப்பினும் சோர்வடையாமல் அடுத்த படத்தில் தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் “காதல் கொண்டேன்” திரைப்படத்தில் நடித்து வெற்றி வாகை சூடினார்.

இந்நிலையில் இப்படத்தை பற்றி தனுஷ் கூறியுள்ளதாவது துள்ளுவதோ இளமை படத்தில் நான் சந்தித்த விமர்சனங்கள் அனைத்தும் காதல் கொண்டேன் வெளியான பின்பு அப்படியே பாராட்டுகள் ஆக மாறியது. இந்தப் படம் ரிலீஸான இரவு என் வாழ்க்கையே மாறியது என்று தான் கூற வேண்டும். அதுவரையிலும் என்னை விமர்சித்தவர்கள் பாராட்ட ஆரம்பித்ததோடு என் அண்ணனா இயக்குனர் செல்வராகவனுக்கும் இந்தப் படம் திருப்புமுனையாக அமைந்தது.  என் நடிப்பில் வெளியான இந்தப்படம் வெற்றி பெற்றதற்கு முழு காரணம் என் அண்ணன் செல்வராகவன் மட்டுமே” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |