அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸ் நகரில் நிக்கா நிகவுபின் (21) என்ற இளம்பெண், பிளென்டி ஆஃப் பிஷ் என்ற டேட்டிங் வலைதளம் வாயிலாக ஆடவர் ஒருவரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். இதையடுத்து ஹெண்டர்சன் நகரிலுள்ள சன்செட் ஸ்டேசன் ஓட்டலில் சந்திப்பது என்று இருவரும் முடிவு செய்தனர். இதற்காக இருவரும் ஒரு ஓட்டலில் அறை வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த நாளில் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் அந்த நபரின் கண்களை நிக்கா துணியால் கட்டி பிறகு விளக்குகளையும் அணைத்துள்ளார். பின் ஒரு சில நிமிடங்கள் கழித்து அந்நபருக்கு கழுத்து பகுதியின் ஓரத்தில் வலி ஏற்பட்டுள்ளது. ஆகவே என்ன நடக்கிறது என்று உணர்ந்து கொண்ட அவர், நிக்காவை தள்ளி விட்டு விட்டு அவசர எண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் கூறியபோது, ஈரானிய தளபதி குவாசிம் சுலைமானி சென்ற 2020ம் ஆண்டில் அமெரிக்க படைகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கவே, நிக்கா அந்த நபரை கத்தியால் குத்தியுள்ளார் என தெரிவித்தனர். இச்சம்பவத்திற்கு பின் ஓட்டல் ஊழியர் ஒருவரிடம் நடந்த விபரங்களை கூறிவிட்டு நிக்கா தப்பியோட முயற்சி செய்துள்ளார். அதன்பின் காவல்துறையினரிடம் பிடிபட்ட நிக்கா கூறியபோது, கிரேவ் டிக்கர் என்ற பாடல் ஒன்றை கேட்டேன். அதன்பிறகே பழிவாங்கும் தூண்டுதல் தனக்குள் ஏற்பட்டது என்று அவர் கூறியுள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகில் கடந்த 2020ஆம் ஆண்டில், அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
அப்போது அவருடன் ஈராக் ராணுவம் துணை தளபதி அபுமஹதி அல் முகந்திஸ் மற்றும் 6 பேரும் கொல்லப்பட்டனர். அமெரிக்க நாட்டின் இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகமாகியது. அதனை தொடர்ந்து காசிம் இறுதி சடங்கில் அஞ்சலி செலுத்த சென்ற இடத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 50 பே ர்இறந்தனர். குவாசிம் சுலைமானி மரணத்திற்கு பிறகு, அவருக்கு அடுத்த நிலையில் இருந்த இஸ்மயில் கானி ஈரானின் புரட்சிகர ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார். அப்போது அவர் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழி தீர்ப்போம் என்று சபதமேற்றார். இந்த நிலையில் அமெரிக்கர் ஒருவரை டேட்டிங் எனும் பெயரில் அழைத்து அவரை ஈரானிய இளம்பெண் கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.