Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிஜேபி_யை நோக்கி ”தடம் புரளும் காங். தலைவர்கள்” தேசிய அரசியலில் தீடீர் திருப்பம் …!!

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று எந்த மாநில அரசும் தெரிவிக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்ற கேரளா , மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்நிலையில் கேரளா கோழிக்கோட்டில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்று பேசிய மூத்த வழக்கறிஞரும் , காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான கபில் சிபில் குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது என்றும் , எனவே இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று எந்த மாநில அரசும் கூற முடியாது என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பது சட்ட விரோதமான செயல் என்று குறிப்பிட்ட அவர் , குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தைப் பொறுத்தவரை நாட்டு மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டம் என்றும் , இந்த போராட்டத்தை அரசியல் கடந்து மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் முன்னெடுத்துச் செல்வதாக கூறினார்.

முன்னதாக கோழிக்கோட்டில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற அவர்  குடியுரிமை திருத்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய போது ஏராளமான பொய்களை மத்திய அரசு கூடியது என்று குற்றம்சாட்டினார். குடியுரிமை திருத்தச்சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் காங்கிரஸ் வழக்கறிஞ்சர் தெரிவித்த இந்த கருத்து அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |