தேசிய திருக்கோவில் கூட்டமைப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தேசிய திருக்கோவில் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் பெருமாள் சந்திரபோஸ் மற்றும் மாநில செயலாளர் குமரன்கொம்டா ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திங்களூரில் மிக பிரசித்தி பெற்ற நவக்கிரகங்களில் ஒன்றாக விளங்கும் சந்திரன் தலம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று சுமார் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் கோபுரங்களில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் சரி செய்ய வேண்டும்.
கோவிலின் எதிரே அமைந்துள்ள குலத்தின் வழியாக கோவிலுக்குள் நுழையும் பிரதான பாதையாக சிவபெருமான் சன்னதியை மையப்படுத்தி அமைக்க வேண்டும். அதேபோல் கோவிலுக்கு சொந்தமான குளத்தை முழுமையாக சீரமைத்து பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாகவும், கழிவறை ,குளியலறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும். மேலும் கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவையாற்றிலிருந்து சாலை மார்க்கமாக வரவேண்டும் என்பதால் போதிய பேருந்து வசதிகள் இல்லை. எனவே அதிகமான பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.