TN TET தேர்விற்கு விண்ணப்பித்தோர்களுக்காக முதல் தாளின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை பற்றி காணலாம்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியருக்கான காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு TN TET நடத்தப்பட இருக்கிறது. இந்த ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டு தாள்களை கொண்டுள்ளது. அதில் நாம் முதல் தாள் பற்றி பார்ப்போம்.
முதல்தாளானது டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம். முதல் தாளை எழுதுபவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வின்போது 50 சதவீதம் தேர்ச்சி பெற்றதோடு D.T.Ed படித்திருக்க வேண்டும். முதல்தாள் எழுதுவதற்கான விவரங்களை நாம் பார்க்கலாம்.
இந்த முதல் தாளில் 150 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேரம் இந்த தேர்வு நடைபெறும். இதில் 30 மதிப்பெண்ணுக்கு மொழிப் பாடமும், 30 மதிப்பெண் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தலும், 30 மதிப்பெண்ணுக்கு ஆங்கிலமும், 30 மதிப்பெண்ணுக்கு கணிதமும், 30 மதிப்பெண்ணுக்கு சுற்றுச்சூழல் கல்வியும் நடைபெறும். இத்தேர்வுக்கு நாம் படிக்கவேண்டிய பாடத் திட்டங்களைப் பற்றி பார்க்கலாம்.
குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தலிருந்து கேட்கப்படும் கேள்விக்கு 6 முதல் 11 வயதுக்குட்பட்ட அவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றலை படிக்கவேண்டும். மொழிப்பாடத்தில், சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள் தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்களை படிக்க வேண்டும். ஆங்கிலத்தில், மொழியின் கூறுகள் தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்களை கற்கவேண்டும். கணித மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளிலிருந்து, கருத்துக்கள் சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்தப் பாடங்களில் கற்பித்தல் புரிதல் வேண்டும்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/ என்கின்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாய் மற்றும் SC, SCA, ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 650 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 13ம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள்.