இந்தியாவில் 2018-ம் ஆண்டில் வேலை இல்லாதவர்கள் தற்கொலை 1.34 லட்சம் பேராக அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண தகவல் அதிர்ச்சி அளிக்கின்றது.
நாட்டில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளதாக பேசப்பட்டு வந்தநிலையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.அதில் கடந்த 2018 ஆம் ஆண்டில் நாடுமுழுவதும் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருந்ததில்2018ஆம் ஆண்டும் நாடுமுழுவதும் ஒட்டுமொத்தமாக 1, 34 , 516 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
இது 2017-ம் ஆண்டைவிட 3.6 சதவீதம் அதிகம் என்பது நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றது. விவசாயிகள் தற்கொலையில் 17,972 எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் , 13,896 என்ற எண்ணிக்கையில் தமிழ்நாடு 2-ம் இடத்திலும், 13,225 என்ற எண்ணிக்கையில் மேற்குவங்காளம் 3-ம் இடத்திலும் , 11,775 பேர் என்ற எண்ணிக்கையில் மத்தியபிரதேசம் 4-ம் இடத்திலும், 11,561 என்ற எண்ணிக்கையில் கர்நாடகம் 5-ம் இடத்திலும் உள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள 5 மாநிலங்களிலேயே நாட்டின் பாதி தற்கொலைகள் நடைபெறுகின்றது என்பதை உறுதி செய்யும் வகையில் அதன் புள்ளி விவரம் 50.9 சதவீதமாக இருக்கின்றது. 2018_ஆண்டில் வேலை இல்லாத காரணத்தால் 35 பேரும் , சுயதொழில் செய்பவர்கள் 36 பேரும் என ஒவ்வொரு நாளும் உயிரை மாய்த்துக் கொள்வதாக அதன் சராசரி சொல்கிறது. அந்த வகையில் வேலை இல்லாதவர்கள் 12,936 பேரும் , இது 9.6 சதவீதமாகவும் , சுயதொழில் செய்வோர் 13,149 பேரும் , இது 9.8 சதவீதமாகவும் தற்கொலை செய்துள்ளனர்.
அதே போல விவசாய துறையில் 10,349 பேர் தற்கொலை செய்து கொண்டது 7.7 சதவீதம் என்ற அளவில் உள்ளதாக தெரிவித்துள்ள ஆய்வு 5,763 பேர் விவசாயிகள் என்றும் , 4,586 பேர் விவசாய தொழிலாளர்கள் என்றும் , 306 பேர் பெண் விவசாயிகள் என்றும் , 515 பேர் பெண் விவசாய தொழிலாளர்கள் என்றும் வகைப்படுத்தியுள்ளது.
பெண்களின் தற்கொலையை ஆய்வு செய்து பார்த்ததில் தற்கொலை செய்த42,391 பெண்கள் எண்ணிக்கையில் 22,937 பேர் குடும்ப தலைவிகள் எனபது மேலும் அதிர்ச்சியடையவைக்கின்றது. இது 54.1 சதவீதம் ஆகும். அதே போல 1, 707அரசு ஊழியர்களும் தற்கொலை செய்துகொண்டு 1.3 சதவீதமாகவும் , 8,246 தனியார் நிறுவன ஊழியர்களும் தற்கொலை செய்து கொண்டு 6.1 சதவீதமாகவும் , 2,022 பேர் பொதுத்துறை ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டு 1.5 சதவீதமாகவும் , 10,159 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு 7.6 சதவீதம் என்ற அளவில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணம் தெரிவித்துள்ளது.