மண்டல அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கத்தில் வைத்து மண்டல் அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் போட்டியை தொடங்கி வைத்துள்ளார்.
இந்த போட்டி 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 200 மீட்டர் நீளமும், 100 மீட்டர் தூரம் மற்றும் 15 முதல் 17 வரையிலான வீரர்களுக்கு 50 மீட்டர் தூரம் என்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் தஞ்சாவூர், திருச்சி, நாகை, கரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த 250 வீரர்கள் கலந்து கொண்டனர்.