கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் பலமுறை கண்டித்தும் அதை கேட்காத பாபு நான்கு நாட்களுக்கு முன் மீண்டும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாபுவின் தம்பி சாபு எவ்வளவு சொல்லியும் திருந்தாத அண்ணனை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு எடுத்தார். இந்நிலையில் அவர் குடித்து வந்ததை கண்ட சாபு அண்ணனின் கழுத்தை நெரித்து அருகே உள்ள தோட்டத்தில் உதைத்துள்ளார். பின்னர் எதுவும் அறியாதவர் போல அண்ணனை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் சாபு மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது பல உண்மைகள் வெளியானது. அதாவது சாபு குடிபோதையில் வந்ததால் அண்ணனை அடித்து கீழே விழச் செய்துள்ளார். அதில் மயக்கமடைந்த பாபுவை அருகில் உள்ள தோட்டத்தில் உயிரோடு புதைத்து உள்ளார். இதையடுத்து போலீசார் சாபுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.