ரஷ்யப் படைகள் மரியுபோல் நகரில் உள்ள தியேட்டர் ஒன்றில் ஏற்படுத்திய தாக்குதலில் 300 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன்- ரஷ்யா தாக்குதலானது தொடர்ந்து ஒரு மாதங்களாக நீடித்து வருகிறது. இதில் தொடர்ந்து ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது குண்டு மழை பொழிகின்றது. அதேசமயம் ரஷ்ய படைகளுக்கு ஈடாக உக்ரைன் படைகளும் சவால் அளிப்பதால் ரஷ்யாவால் இன்னும் தலைநகர் கீவை கைப்பற்ற முடியவில்லை. ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரை சுற்றி வளைத்துள்ளன.
இவற்றில் முக்கிய நகரங்களில் ஒன்று மரியோ போல் நகரமாகும். இந்நகரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம் ஒன்று உள்ளது. இதையடுத்து ரஷ்யப் படைகள் இந்நகரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் தங்களைக் காத்துக் கொள்வதற்காக, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வழிபாட்டுத்தலங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் தியேட்டர்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் மரியுபோல் நகரில் உள்ள டிராமா தியேட்டரில் ரஷ்யப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
இந்த கொடூர தாக்குதலில் 300 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சப்படுவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இத்தாக்குதலை நேரில் கண்டவர்கள் அளித்த தகவலின்படி, டிராமா தியேட்டரில் 300 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் கிடைத்திருப்பதாக மரியுபோல் சிட்டி ஹால் தரப்பில் டெலகிராம் சமூக வலைத்தளத்தில் பதிவிடபட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.