உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவில் இதுவரை 1,3௦௦ ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா 32வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் மேற்கு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் உளவு அதிகாரிகள் கூறுகையில். “ரஷ்யாவில் பெருத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், 7 ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 1300 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய கிளைமிங் தெரிவித்துள்ள நிலையில் பலியானோரின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஐந்து மடங்கு அதிகமாக இருக்கலாம்.
இதனைத் தொடர்ந்து 37 ஆவது படைப்பிரிவின் தலைவர் தனது படைகளை நல்ல முறையில் வழி நடத்தவில்லை என்று சொந்த படையைச் சேர்ந்த வீரர்களே தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக” தெரிவித்துள்ளனர்.