Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த பெண்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் நடவடிக்கை…!!

தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லூர் மாரியம்மன் கோவில் தெருவில் தொழிலாளியான ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு நேரத்தில் திடீரென சத்தம் கேட்டுள்ளது. இதனால் ஜெயந்தி எழுந்து பார்த்த போது வீட்டிற்குள் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே ஓடி சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து ஜெயந்தி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஜெயந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வினோத் என்ற வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |