உலகம் முழுவதிலிருந்தும் 192 நாடுகள் கலந்து கொண்டாடும் வகையில் துபாய் EXPO 2020-யானது உலகின் மிகப்பெரிய கண்காட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த இந்த கண்காட்சியானது வரும் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் கலாச்சாரம், அறிவியல் தொழில்நுட்பம், பண்பாடு, கலை, பொழுதுபோக்கு என பல கலாச்சார பண்பாடுகள் நிறைந்து காட்சியளிக்கும் இந்த கண்காட்சி அரங்கை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் தமிழர்களின் பெருமை மற்றும் பண்பாட்டை விளக்கும் விதத்தில் புர்ஜ் கலிப்பாவில் கீழடி குறித்த காணொளியை ஒளிபரப்பப்பட்டது.
3200 ஆண்டுகள் தொன்மையுடைய நமது வரலாற்றின் பெருமை வாய்ந்த கீழடி & பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காணொளி, உலகின் உயரமான கட்டடமான #BurjKhalifa-வில் ஒளிபரப்பப்பட்டது.
குழுமியிருந்த உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர்.
இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்! pic.twitter.com/Thu2C7kPB2
— M.K.Stalin (@mkstalin) March 25, 2022