மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழபத்தை பகுதியில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பேட்டை பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த குமார் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.