சாமி சிலைகள் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் யூனியன் அலுவலகம் அருகில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வள்ளி சிலை, வெண்கல முருகன் சிலை மற்றும் 120 கிலோ பித்தளை பொருட்கள் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பொன்னுசாமி என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவரிடம் இருந்த இரண்டு சிலைகளையும் பத்திரமாக மீட்டனர்.