Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து… ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்…. பெரும் பரபரப்பு…!!!

திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மேற்கொண்டுள்ள அரசு முறை துபாய் பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறு கருத்து பரப்பியுள்ளார். அதாவது, முதல்வரின் அரசு பயணத்தை சொந்த முதலீடு செய்ய பயணம் மேற்கொண்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் தனது கருத்துக்கு அண்ணாமலை அடுத்த 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்  இல்லையென்றால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு   நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

Categories

Tech |