மனிதநேய ஜனநாயக கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பண்டாரவாடை பேருந்து நிலையம் அருகில் வைத்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஒன்றிய செயலாளர் அஸ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்க்கு தடை விதித்த ஹைகோர்ட் தீர்ப்பை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் மாநில மருத்துவர் அணி செயலாளர் முகமது மகரூப், பல இஸ்லாமிய அமைப்புகள், தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.