சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு அப்பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அய்யனாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அய்யனாருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.