பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் மயமாக்குவதை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வருகிற மார்ச் 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். அதாவது மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை கைவிடுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளனர்.
ஆனால் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். இதன்காரணமாக போக்குவரத்த்துறை நிர்வாகம் மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் அனைத்து ஊழியர்களும் பணிக்கு வரவேண்டும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மீறி யாரும் விடுப்பு எடுத்தால் அவர்களின் சம்பளம் ரத்து செய்யப்படும். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.