இளம்பெண் குறித்து அவதூறு பரப்பிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் அருகே ஐந்தாம் கட்டளை மங்கையம்மன் கோவில் தெருவில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சதீஷ் இளம்பெண் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரையும் சதீஷ் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து இளம்பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.