Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! அக்கறை கூடும்..! அனுசரணை தேவை..!!

தனுசு ராசி அன்பர்களே…! மனதில் இனம் புரியாத வருத்தம் ஏற்படும்.

நண்பரின் ஆலோசனை நல்ல வழியைக் காட்டும். வீட்டில் மிகுந்த அக்கறை காட்டுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பயன் தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம். எதிலும் எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும். எந்த காரியத்திலும் சின்னதாக தடை தாமதம் இருக்கும். மனதை நீங்கள் தைரிய படுத்த வேண்டும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் திடீர் பயணத்தை சந்திக்கக்கூடும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லுங்கள். போராட்டத்தை கண்டு அஞ்சாமல் எதிர்த்து நின்று வெற்றி பெறுவீர்கள். குறை சொன்னவர்கள் விலகிச் செல்லக் கூடும். மாலை நேரத்திற்கு பிறகு எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். வீட்டில் அனைவரும் ஆதரவு கொடுப்பார்கள். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். மாணவ செல்வங்கள் உடலை ஓய்வாக வைத்துக் கொள்ளுங்கள். படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 5.

அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மட்டும் நீல நிறம்.

Categories

Tech |