Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருட்டு நகைகள் அடகு வைத்து…. மனைவிக்கு வளைகாப்பு…. கைது செய்யப்பட்ட நபர்….!!

சென்னை மாவட்டம் வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் பீரோவில் இருந்த 80 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றதாக கூறி  காவல் துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில்  இது குறித்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் பேரில், வேளச்சேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் இந்துமதி ஆகியோர் தனிப்படை மூலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் கொள்ளையடித்தவர் முன்னாள் குற்றவாளியான  முத்துக்கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. கொளத்தூர் காவல் நிலைய வழக்கு தொடர்பாக எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது வேளச்சேரியில் கொள்ளையடித்ததாக முத்துகிருஷ்ணன்  ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்திய போது கொள்ளையடித்த நகைகளை அடகு வைத்து மனைவிக்கு வளைகாப்பு நடத்தியதாக தெரிவித்தார். பின்னர் மீதமுள்ள 56 பவுன் தங்க நகைகள், ரூ.4.5 லட்சம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |