டால் எரிமலையானது மிகுந்த ஆவேசத்துடன் வெடிக்க ஆரம்பித்துள்ளது.
பிலிப்பைன்சில் உள்ள டால் எரிமலை ஆவேசத்துடன் வெடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த எரிமலையானது 1.5 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பலை வெளியேற்றி வருகிறது. அதன் ஆவேசம் தீவிரமாக உள்ளதால் இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த எரிமலை வெடிக்க ஆரம்பித்துள்ளதால் ஏரியை சுற்றியுள்ள மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உள்பட சுமார் ஆயிரம் குடும்பங்களை அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து எரிமலையில் இருந்து மிகப்பெரிய பள்ளம் வழியாக மாக்மா குழம்புகள் ஊடுருவ தொடங்கியுள்ளதால். இதனால் அதிகமான வெடிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு குறித்து முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மணிலாவிற்கு 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை மிகசிறியது என்றாலும் தொடர்ந்து காணப்படக்கூடிய ஒன்றாகும்.