மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து துணைத்தலைவர் படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடந்த கலவரத்தில் குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ ரூபா கங்குலி பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் இருப்பதற்கே மக்கள் பயந்து நடுங்கி கொண்டிருக்கின்றனர்.
நாள்தோறும் ஊரைவிட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொலை செய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் ஏகப்பட்ட சித்திரவதைகளை அனுபவித்து உள்ளனர். அவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தீ வைக்கப்பட்டுள்ளனர். அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.