கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் தினமும் 30 ஆயிரம் வீதம் ஆன்லைனில் வழங்கப்பட்டு விடுகிறது. அதுதவிர, விஐபி பிரேக் தரிசனம், ஸ்ரீவாரி அறக்கட்டளை, சுற்றுலாத்துறை மூலம் தரிசன டிக்கெட்டுகள் என நாளொன்றுக்கு சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு வருகின்றனர்.
இந்நிலையில் வார இறுதி நாட்களில் விஐபி பிரேக் தரிசனம் மற்றும் சிபாரிசு கடிதங்கள் மூலம் வரும் தரிசனம் போன்றவற்றை தேவஸ்தான நிர்வாகிகள் நிராகரித்துள்ளனர். இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அதிகரித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை காரணமாக அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.