Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீடே மனக்கிற அளவுக்கு சுவையான ரசம்…..!!!!! தெரிஞ்சிக்கணுமா..? எளிய முறையில்……

மிகவும்  சுவையான ரசம், எல்லோருமே ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க….ஒரு டம்ளர்ல கொடுங்கன்னு கேட்டு வாங்கி குடிப்பாங்க….!!!!

தேவையானவை:

பச்சை மிளகாய்    : 2

பூண்டு                        : 1 முழுசு

சீரகம்                           :ஒன்றரை ஸ்பூன்

பெருங்காயத்தூள் :ஒன்றரை டீஸ்பூன்

மஞ்சள் தூள்             :ஒன்றரை டீஸ்பூன்

உப்பு                             :தேவையான அளவு

கொத்தமல்லி           : ஒரு கொத்து அளவு

கறிவேப்பில்லை     : ஒரு கொத்து அளவு

மிளகு                            : ஒன்றரை டீஸ்பூன்

தக்காளி                       : 2

புளி                                 : எலுமிச்சை அளவு

செய்முறை:

புளி சுடுதண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் புளி கரைக்கும் பொழுது அடியில் மண்டி இல்லாமல் இருக்கும். தக்காளி மற்றும் கொத்தமல்லி தழையை சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். சீரகம், மிளகு ஒன்னு, ரெண்டாக அரைத்து வைத்திருக்க வேண்டும். பின் அதனுடன் பச்சை மிளகாய், தோல் உரிக்காத ஒரு முழு பூண்டு, சிறிதளவு  கறிவேப்பில்லை போட்டு, ஒன்னு, ரெண்டாக அரைத்து கொள்ளவேண்டும்.  ஒரு பாத்திரத்தில் நல்லஎண்ணெய் ஊற்றி அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதை போட்டு நன்கு கிளற வேண்டும். நறுக்கிய தக்காளியை போட்டு கிளற வேண்டும். அதில் மேலும் கறிவேப்பில்லை, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள்,தேவையான அளவு உப்பு போட வேண்டும். பின் நாம் கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றி, கூட கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நுரை வரும் அளவு சூடாக்க வேண்டும். அபோது நறுக்கிய கொத்தமல்லி தழையும்  போட வேண்டும். அவ்ளோ தாங்க சுவையான ரசம் ரெடி….

ரசம்  சாப்பிடுவது நமது உடலில் உள்ள சளியை போக்கும், இருமல் வராது, நெஞ்சுசளிக்கு சிறந்த உணவு…

 

 

Categories

Tech |