Categories
சினிமா

தனுஷின் “நானே வருவேன்”… வைரலாகும் போஸ்டர்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தி இருக்கின்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது வாத்தி, திருசிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். பல வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன், தனுஷ், யுவன் சங்கர் ராஜா இணைந்த இந்த கூட்டணிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த படத்தின் போஸ்டர் வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமானது. மேலும் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த திரைப்படத்தில் தனுஷ் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அண்மையில் இந்த திரைப்படம் இறுதிகட்ட பணியில் இருப்பதாகவும் பிரம்மாண்டமாக படம் தயாராகி உள்ளதாகவும் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியிருந்தார். தனுஷின் திரைப்படங்கள் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் இந்தப் படம் திரையரங்கில் வெளியாகும் என கூறியிருந்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |