மாமனிதன் திரைப்படத்தை பார்த்துவிட்டு ரஜினி பாராட்டியதை டுவிட்டரில் இயக்குனர் சீனு ராமசாமி பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சீனுராமசாமி தற்போது இயக்கியுள்ள திரைப்படம் “மாமனிதன்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒய்எஸ்ஆர் புரோடக்சன் தயாரித்து இருக்கின்றது. இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது சென்ற ஜனவரி மாதம் மாமனிதன் திரைப்படத்தை ரஜினி பார்த்துவிட்டு போன் செய்து ரஜினி பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.
அவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளததாவது, “ஜனவரியில் #மாமனிதன் படத்தை பார்த்து பாராட்டி நெகிழ்வாக தொலைபேசியில் நீங்கள் பேசியதை வெளியே சொல்லவில்லை. காரணம் நான் சொன்னால் விற்பனைக்காக இப்படிச் சொல்கின்றார் என்பார்கள். நீங்கள் படம் பார்த்ததே ஆசிகள். எனக்கு அது போதும் என்றேன். இன்று வெளியீட்டுத் தேதி விற்பனை உள்ளிட்டவை முடிந்திருக்கின்றது சார். நன்றி @rajinikanth என குறிப்பிட்டு இருக்கின்றார்.