Categories
உலக செய்திகள்

பொதுமக்கள் அனைவரும் இணைத்து போராட்டம் நடத்துங்கள்…. இம்ரான்கான் பகிரங்க பேச்சு….!!!

இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் வாக்கெடுப்புக்கு முன்னதாக பொதுமக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எடுத்து வருகின்றனர். இந்த தீர்மானத்துக்கு இம்ரான்கான் கட்சியை சேர்ந்தவர்களே பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 24 தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள்  எதிராக வாக்களிக்க தயாராக உள்ளனர்.

இந்த நிலையில் இம்ரான் “கான் என்ன நடந்தாலும் சரி. நான் பதவியை விட்டு விலக மாட்டேன். நான் சண்டை இன்றி சரணடைய மாட்டேன். மோசடி மனிதர்களின் அழுத்தம் காரணமாக நான் ஏன் வெளியேற வேண்டும்” என்று பகிரங்கமா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அவரை எதிர்க்கட்சித் தலைவர்கள் பதவி விலகுமாறு வலியுறுத்தி வரும் நிலையில் அவரது கூட்டணி கட்சியினர் சிலர் எதிர்க் கட்சியுடன் கூட்டமைப்பு போவதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் வாக்கெடுப்புக்கு முன்னதாக பொதுமக்கள் ஆதரவை திரட்டி வருகிறார். மேலும் அவர் பொதுமக்களிடம் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று லட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து மாபெரும் பேரணியை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டம் தொடர்பாக இம்ரான் கானின் ‘பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ)’ கட்சியின் செனட் உறுப்பினர் பைசல் ஜாவேத் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இஸ்லாமாபாத்தில் பரேட் அவென்யூவில் மாலை 3 மணி முதல் 4 மணி வரையில் இம்ரான் கான் வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த பொதுக் கூட்டம் காரணமாக அப்பகுதியில் பொது போக்குவரத்து மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு இஸ்லாமாபாத் போக்குவரத்து போலீஸ் தற்காலிக தடை விதித்துள்ளது. பொதுக்கூட்டத்தில் இம்ரான்கான் நிர்வாக ரீதியாக சில முடிவுகளை அறிவிக்கலாம் என்று அரசியல் திறனாய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் பொதுக் கூட்டத்தை நாளை எதிர்க்கட்சியான ஜமியத் உலமா-இ-இஸ்லாம் பஸ்ல் கட்சி  நடத்த உள்ளதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |