லட்சுமணபுரம் கிறிஸ்தவ ஆலயத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திட்டக்குடி அருகில் உள்ள லட்சுமணபுரத்தை சேர்ந்த வில்லியம்ஸ் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, லட்சுமணபுரத்தில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தின் அருகே வசித்து வரும் ஒரு நபர் தனது இடம் ஆலயத்தின் இடத்துடன் சேர்ந்து இருப்பதாக கூறி தகராறு செய்து வருகின்றார்.
மேலும் ஆலயத்திற்கு உள்ளே நுழைந்து சிலுவை, கல்வெட்டு, பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளார். இதை தட்டி கேட்டவர்களிடம் மிரட்டி விட்டு சென்றிருக்கிறார். எனவே இதுகுறித்து ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதலால் ஆலயத்திற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது