Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில்… காசநோய் விழிப்புணர்வு… அனைத்து வீடுகளுக்கும் கொசு வலை வழங்கும் திட்டம்…!!

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் கொசுவலை வழங்கும் திட்டத்தை பேரூராட்சி மன்றத் தலைவர் செல்வி ஆனந்தன் ஆரம்பித்து வைத்துள்ளார்.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இதில் காசநோய் ஒழிப்பது குறித்து “காச நோய் இல்லாத பாரதம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் ஜனார்த்தனன் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் ஸ்ரீதர் முன்னிலை வகித்துள்ளார். மேலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்றத் தலைவர் செல்வி ஆனந்தன், அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொசு வலை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து காச நோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் முத்தமிழரசி பார்த்திபன், வார்டு உறுப்பினர்கள், திமுக நகர செயலாளர் செல்வகுமார், நிலைய சுகாதார செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் முடிவில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |