ரஷ்யாவின் ஏழாவது படைத்தளபதி தனது சொந்த படை வீரர்களாளையே கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்தை கடந்தும் தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரில் ரஷ்யா தளபதிகள் 6 பேர் முன்னதாகவே உயிரிழந்த நிலையில் தற்போது 7வது தளபதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லெப்டினன்ட் ஜெனரல் யாகோவ் ரெசான்ட்சேவ் (வயது 48) 49 வது கூட்டமைப்பின் தளபதி. இந்த நிலையில் உக்ரைனுக்கு ரஷ்யா தளபதிகள் 20 பேர் அனுப்பப்பட்ட நிலையில் 7 பேர் கொல்லப்பட்டு.மேலும் 13 பேர் மட்டுமே மீதம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரஷ்யாவிற்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இவர் படை வீரர்களிடையே மனவுறுதி குறைந்ததால் முன் வரிசையில் நின்று போரிடும் சூழல் ஏற்பட்ட நிலையில் கெர்சன் பிராந்தியத்தில் உள்ள சொர்னோபைவ்கா விமான தளத்தில் உக்ரைன் படைகளால் இவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாயின. ஆனால் ‘தி நேஷனல்’ (அபுதாபி ஆங்கில நாளிதழ்) கூறியதில் அவர் தனது சொந்தக் படையினரால் கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் வந்த நிலையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது