சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் பைக் வாங்குவதற்காக பூபதி என்ற இளைஞர் பைக் ஷோரூம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அவர் தனக்கு பிடித்த மாடல் பைக்கை ஷோரூமில் பதிவு செய்துவிட்டு, பின்னர் அதற்கான பணத்தை வழங்கிய போது ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது பைக் வாங்கியதற்கான ரூ.2 லட்சம் பணத்தை அவர் ஒரு ரூபாய் நாணயங்களாக வழங்கியுள்ளார்.
இதையடுத்து ஷோரூம் ஊழியர்கள், பூபதி, அவருடைய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அத்தனை நாணயங்களையும் பல மணி நேரங்களாக எண்ணி முடித்துள்ளனர். அதன் பிறகு தனது புதிய பைக்கை பூபதி வாங்கி சென்றுள்ளார்.